தள அறிமுகம்

Saturday, April 17, 2010 by Admin ·
என் இனிய சகோதர, சகோதரிகளே!

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!
 

இணையத்தில் உலா வந்த போது ilovehadith.com என்ற இணையதளத்தை காண நேரிட்டது. அத்தளத்தில் பல்வேறு தலைப்பில் நபிமொழிகளை ஆங்கிலத்தில் தொகுத்திருந்தனர். அதே போல் தமிழில் உருவாக்கினால் என்ன? என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இவ்வலைப்பூ. நபிமொழிகள் மட்டும் அல்லாமல் குர்ஆனின் வசனங்களையும் இங்கு தொகுத்துள்ளேன்.


இது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல, ஒரு விஷயத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று அறிய விரும்பும் மாற்றுமத சகோதரர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் (இறைவன் நாடினால்).

தொகுக்கப்பட்டுள்ள நபிமொழிகளில் தவறோ அல்லது எழுத்துப் பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், நான் திருத்திக் கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்த நபிமொழிகளையோ, குர்ஆன் வசனங்களையோ தெரியப்படுத்த விரும்பினால்  கீழுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இறைவன் நாடினால் சேர்த்துக் கொள்கிறேன்.

  "என்னிடமிருந்து ஒரு செய்தியை நீங்கள் தெரிந்திருந்தாலும் அதையும் பிறருக்கு சொல்லி விடுங்கள்" என நபி அவர்கள் கூறினார்கள். 
நூல்: புகாரி


இவ்வலைப்பூ உபயோகமானது என்று நீங்கள் எண்ணினால்,  மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். 

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழியை தந்தருள்வானாக!



தங்கள் சகோதரன்,

நூ.ஹ. அப்துல் பாஸித்

தொடர்புக்கு: 




இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்