Friday, April 16, 2010

அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
 

நூல் : புஹாரி,எண் 5590

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்