Monday, June 28, 2010

ஹலால், ஹராம்

"ஹலால் என்னும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் என்னும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை விட்டுவிடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டுவிடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
நூல்: புகாரி (எண் 2051)

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்